எய்ம்ஸ் குறித்த எந்த திட்ட அறிக்கையும் தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்பிக்கவில்லை - ஆர்.டி.ஐ தகவல்

திட்ட அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதால், எய்ம்ஸ் அமைப்பதற்கு இன்னும் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

எய்ம்ஸ் குறித்த எந்த திட்ட அறிக்கையும் தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்பிக்கவில்லை - ஆர்.டி.ஐ தகவல்
எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்
  • News18
  • Last Updated: July 5, 2019, 3:09 PM IST
  • Share this:
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த ஒரு திட்ட அறிக்கையையும் தற்போது வரை மத்திய சுகாதார துறையிடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மதுரையில் தோப்பூர் ஆஸ்டின்பட்டி இடத்திற்கு அருகே உள்ள கே.புதுப்பட்டியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க உள்ள ஜப்பானிய நிதி குழுவினர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜூன் 10-ம் தேதி ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தமிழ்நாடு அரசின்  திட்ட அறிக்கை குறித்து, மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு அளித்திருந்தார். அதற்கு தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட அறிக்கை குறித்த எந்த ஒரு தகவலும் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மத்திய  அரசின் திட்ட அறிக்கை மத்திய சுகாதார துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு முடிந்த பின்பே முழுமையான மத்திய திட்ட அறிக்கை தயார் ஆகும் என்றும் இந்த ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதால், எய்ம்ஸ் அமைப்பதற்கு இன்னும் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க... கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்து பெண்கள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading