முகப்பு /செய்தி /இந்தியா / கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் புத்தகத்தை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் புத்தகத்தை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தென்மண்டலம் உள்ளடக்கிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரளா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, The Dravidian Model புத்தகத்தை பரிசளித்தார்.

திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவிற்கு சென்றுள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது தென்மண்டல குழு.

மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி, தற்போது வரை 29 தென்மண்டலக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதன்படி செப்டம்பர் 3ஆம் தேதி 30வது கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது.

அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தென்மண்டலம் உள்ளடக்கிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்பித்தார். அப்போது அவருக்கு The Dravidian Model புத்தகத்தை பரிசளித்து ,பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Dravidam, Kerala CM Pinarayi Vijayan