• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சோனியா, ராகுலுடன் சந்திப்பு: சிந்துவெளி முதல் வைகை வரை புத்தகத்தை பரிசளித்த ஸ்டாலின்!

சோனியா, ராகுலுடன் சந்திப்பு: சிந்துவெளி முதல் வைகை வரை புத்தகத்தை பரிசளித்த ஸ்டாலின்!

சோனியா- ஸ்டாலின் சந்திப்பு

சோனியா- ஸ்டாலின் சந்திப்பு

டெல்லிக்கு முதன்முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவரது மகன் ராகுல் காந்திஆகியோரை ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

  • Last Updated :
  • Share this:
    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்த் மற்றும்  ராகுல் காந்தி எம்.பி. ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். 

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை  நேற்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.  இது தொடர்பான மனுக்களையும் பிரதமரிடம் அவர் வழங்கினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா ஆகியோர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புத்தகம் பரிசளித்த ஸ்டாலின்

    அதன்படி, இன்று காலை 10 மணியளவில் சோனியா காந்தியின் இல்லத்துக்கு தனது மனைவி துர்காவுடன் ஸ்டாலின் என்றார். அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். அப்போது, ஜார்னி ஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ்  டு வைகை என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் சோனியா காந்திக்கு பரிசளித்தார்.

    இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்.

    ராகுல் நெகிழ்ச்சி

    மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ இன்று  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நானும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தத்தில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: