Home /News /national /

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற, மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற, மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

அசன்சோல் மக்களவை மற்றும் பல்லிகஞ்ச் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 12-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற, மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவில் எம்பியாக இருந்த பாபுல் சுப்ரியோ தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதேபோன்று மாநில அமைச்சரும், பல்லிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினருமான சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானார்.

இதையடுத்து அசன்சோல் மக்களவை மற்றும் பல்லிகஞ்ச் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 12-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள இன்று எண்ணப்பட்டன. இதில் அசன்சோல் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 358 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க - டெல்லி அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது வன்முறை... போலீசார் குவிப்பு

பாஜக சார்பில் போட்டியிட்ட அக்னிமித்ரா பாலுக்கு 3 லட்சத்து 53 ஆயிரத்து 149 வாக்குகள் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பர்தா முகர்ஜிக்கு 90 ஆயிரத்து 412 வாக்குகளும், காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட பிரசஞ்சித் புதாண்டிக்கு 15 ஆயிரத்து 35 வாக்குகளும் கிடைத்தன.

இதேபோன்று பல்லிகஞ்ச் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... 2024 தேர்தல் குறித்து ஆலோசனை

இடைத் தேர்தல் வெற்றி குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், 'இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாங்கள் செயல்படுவோம்' என்று தெரிவித்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Mamata banerjee

அடுத்த செய்தி