உத்தரப் பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியை பிடித்து கீழே தள்ளிய காவல்துறை
உத்தரப் பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியை பிடித்து கீழே தள்ளிய காவல்துறை
டெரிக் ஓ பிரைன்
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைனை காவல்துறையினர் பிடித்து கீழே தள்ளினர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தூக்கி வீசினர். மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த நிலையில், இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீஸார் எடுத்துச் சென்று நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் மாவட்டத்துக்குச் சென்றனர்.
Trinamool MPs continue dharna 1km away from victim's home after being Mandhandled and roughed up by UP police. pic.twitter.com/x31IkiEran
— All India Trinamool Congress (@AITCofficial) October 2, 2020
ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளின் போது, ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான டெரிக் ஓ பிரையன் ஹத்ராஸ் மாவட்டத்துக்குச் சென்றார். அவரையும் உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல்துறையினர் பிடித்துத் தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, ஹத்ராஸிலிருந்து 1 கி.மீ தொலைவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.