Home /News /national /

மாநிலங்களவையில் அமைச்சரின் கையிலிருந்து அறிக்கையை பிடுக்கி கிழிப்பு - திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் அமைச்சரின் கையிலிருந்து அறிக்கையை பிடுக்கி கிழிப்பு - திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்

சாந்தனு சென்

சாந்தனு சென்

மாநிலங்களவையில் அமைச்சரின் கையிலிருந்து பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ. என்ற நிறுவனம் உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த மென்பொருள் மூலம், செல்போனில் பகிரப்படும் தகவல்கள், உரையாடல்களை உளவு பார்க்க முடியும். இந்நிலையில், இந்த மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள சிலரின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை கண்காணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

  இதில், இந்தியாவில் உள்ள இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தவைர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ககளின் செல்போன் உரையாடல், தகவல் பறிமாற்றங்களை கண்காணித்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடலும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ராகுல் காந்தி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் எண்கள், மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்களும் அடங்கும். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிவருகின்றனர்.

  பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஓர் அறிக்கையை வாசித்தார்.

  அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

  இந்த நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் மாநிலங்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் எனவும் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஸ்நாவ், ‘மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வன்முறை கலாச்சாரம் உள்ளது. அவர்கள், அதே கலாச்சாரத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். அடுத்ததலைமுறை மக்கள் பிரதிநிதிகளுக்கு இவர்கள் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள்?’ என்று கேள்விஎழுப்பியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவருடைய விமர்சனத்துக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, ‘மேற்கு வங்க கலச்சாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர விருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஆமாம். எங்கள் கொடி உயரப் பறப்பதால் பெருமை அடைகிறோம். அதேபோல, குஜராத்தின் சாஹிப் உளவு மாடலை பா.ஜ.க தேசிய மாடலாக்குகிறது’ என்று விமர்சித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Parliament, TMC

  அடுத்த செய்தி