கோமியம் குடிச்சிட்டு தயாரா இருங்க என்று பாஜகவினரை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில், பெகாசிஸ், நேதாஜி, சாவர்க்கர் போன்றோர் குறித்து பேசி தனது உரையில் அனல் கிளப்பினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து அனல் பறக்கும் வாதங்களை வைப்பவர். இதன் காரணமாகவே மஹுவா மொய்த்ராவின் உரைகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இவரது பேச்சுகளும் சமூக வலைதளத்தில் வைரலாகும். அந்த வகையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மஹுவா மொய்த்ரா பேசினார்.
முன்னதாக, நேற்று காலையிலே தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் அவரது உரையின் மீது அதிக எதிர்பார்ப்பு உண்டாயிற்று. "ஜனாதிபதியின் உரை நேதாஜியைப் பற்றிப் பலமுறை குறிப்பிடுகிறது. இந்திய அரசு அனைத்து மதத்தினரிடமும் முற்றிலும் நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய அதே நேதாஜிதான் என்பதை இந்தக் குடியரசிற்கு நினைவூட்டுகிறேன்' என்று உரையை தொடங்கிய மஹுவா மொய்த்ரா, இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும் என்ற ஹரித்வார் தரம் சன்சாத் அழைப்பை நேதாஜி அங்கிகரித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க; பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்... ரங்கசாமிக்கு ஆலோசனை கூறிய திமுக
இந்த அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுகிறது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்ப மறுக்கிறது. மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது.
மேலும் படிங்க: பிரதமர் மோடி ராணுவ சீருடையை அணிந்தது சட்டப்படி குற்றம்' - உ.பி நீதிமன்றம் நோட்டீஸ்
நம்முடையது ஒரு வாழும் அரசியலமைப்பு, நாம் அதில் உயிரை சுவாசிக்க தயாராக இருக்கும் வரை அது சுவாசிக்கிறது. இல்லையெனில், அது வெறும் காகிதத் துண்டுதான். தனது சொந்த குடிமக்களை உளவு பார்க்க தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு வரி செலுத்துவோர் பணத்தை செலவழித்த ஒரே அரசு இதுதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது 11 நிமிடங்கள் கடந்துகிட்டதாக கூறி சபாநாயகர் மணி அடித்தார். எனினும் பேச கூடுதலாக 2 நிமிடங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் மஹுவா மொய்த்ரா கேட்டார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.