Home /News /national /

புடவையில் புட்பால் ஆடிய எம்.பி மஹூவா மொய்தரா.. குவியும் பாராட்டுகள்..!

புடவையில் புட்பால் ஆடிய எம்.பி மஹூவா மொய்தரா.. குவியும் பாராட்டுகள்..!

மஹூவா மொய்தரா

மஹூவா மொய்தரா

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா புடவை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kolkata, India
    மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் மஹூவா மொய்தரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான இவர், தைரியமான அதிரடி பேச்சுக்களுக்கும் கருத்துக்களுக்கும் பெயர் போனவர். எனவே, சமூக வலைத்தளத்தில் இவருக்கு தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ட்விட்டரில் இவர் பதிவிடும் கருத்துகளுக்கு அதிக பாலோயர்கள் உண்டு.  அதேபோல் மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், மஹூவா மொய்த்ரா தனது சொந்த தொகுதியான கிருஷ்ணாநகர் தொகுதியில் நடைபெற்ற கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அத்துடன் கால்பந்து மைதானத்தில் களமிறங்கி சிறிது நேரம் விளையாடவும் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் மஹூவா மொய்த்ரா பதிவிட்ட நிலையில், அதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், புடவை அணிந்து கொண்டு இவர் கால்பந்து விளையாடியது தான்.


    கால்பந்தாட்ட களத்தில் புடவையுடன் ஸ்னிக்கர்ஸ், கூலர்ஸ் அணிந்து கொண்டு மகுவா மொய்த்ரா swagஆக உள்ளார் என நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். மகுவா மொய்தராவின் ட்விட்டர் பதிவுக்கு சுமார் 17,000 பேர் லைக் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: இந்தியாவில் சேவையை தொடங்கும் ஹைட்ரஜன் ரயில் - ரயில்வே அமைச்சர் முக்கியத் தகவல்

    உங்கள் ஆட்டம் கூலாக உள்ளது என மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜியும் ட்விட்டரில் கமெண்ட் தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mahua Moitra, TMC, Twitter, Viral News

    அடுத்த செய்தி