• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்ட திரிணாமுல் எம்.பி!

பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்ட திரிணாமுல் எம்.பி!

PM Modi

PM Modi

டெரிக் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், பிரதமர் மோடியை, ஹாலிவுட் ஃபேண்டஸி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 உடன் ஒப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன்.

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் மூத்த தலைவராக இருப்பவர் டெரிக் ஓ பிரையன். ராஜ்யசபா எம்.பியான டெரிக், பிரதமர் மோடியை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருபவர். சமீப காலமாக பிரதமர் மோடி பொருளாதார விஷயங்களை கையாளுவதில் தவறிழைப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் எம்.பி டெரிக் ஓ பிரையன்.

டெரிக் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், பிரதமர் மோடியை, ஹாலிவுட் ஃபேண்டஸி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 உடன் ஒப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பிரதமர் மோடியை பொருத்தி பொருளாதார விவகாரங்களை கையாளுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டதாக காட்டியிருக்கிறார்.

டெரிக் வெளியிட்டுள்ள புகைப்பட பதிவில், பிரமர் மோடியை ஜேம்ஸ் பாண்டாக சித்தரித்து, “அவர்கள் என்னை 007 என குறிப்பிடுவார்கள். 0 - வளர்ச்சி, 0 - பொருளாதார வளர்ச்சி, 7 - ஆண்டு தவறான நிதிமேலாண்மை என 007-க்கு புதிய அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.

Also read: பாகிஸ்தானை உலுக்கிய கவுரவக் கொலைகள்.. ஒரே குடும்பத்தினர் 7 பேர் எரித்துக் கொலை!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்தது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி முறை போன்றவற்றால் இந்தியா பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இறந்த மக்களை கொண்ட தேசம் நம்முடையது. இல்லையென்றால் தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலையேற்றத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். 2014ம் ஆண்டு வரி வாயிலாக 75,000 கோடி ரூபாயை அரசு வசூலித்தது என்றால் அதுவே தற்போது 3.50 லட்சம் கோடியாக வசூலித்துக் கொண்டிருக்கிறது. இது பகல் கொள்ளை இல்லையா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

Also read:  சரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..

இதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே, செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் மத்திய பாஜக அரசின் 7 ஆண்டுகால தவறான பொருளாதார நிதிமேலாண்மை காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை அடமானம் வைத்து பணமாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 9.5% ஆக வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: