கொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயராக தேர்வான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்

கொல்கத்தா மாநகராட்சியின் 29-வது மேயராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிர்ஹத் ஹகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

news18
Updated: December 4, 2018, 6:10 PM IST
கொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயராக தேர்வான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்
கொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயர்
news18
Updated: December 4, 2018, 6:10 PM IST
கொல்கத்தா மாநகராட்சியின் முதல் இஸ்லாமிய மேயராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிர்ஹத் ஹகிம் தேர்வாகியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்த சோவன் சட்டர்ஜி நவம்பர் 22-ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மேயர் தேர்தல் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அம்மாநில அமைச்சர் பிர்ஹத் ஹாகிமும், பா.ஜ.க சார்பில் மீனா தேவி புரோஹித்தும் போட்டியிட்டனர். நேற்று, நடைபெற்ற அந்தத் தேர்தலில் 144 உறுப்பினர்களில் 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஹாகிம் வெற்றி பெற்றார். பா.ஜ.கவின் மீனா தேவி புரோஹித் 5 உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் பெற்றார்.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் இந்த வாக்குப் பதிவை புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்த பிர்ஹத் ஹாகிம், ‘கொல்கத்தா மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மாநகராட்சியை அழகுபடுத்தும் பணியிலும் நான் ஈடுபடுவேன். இந்த மாநகராட்சியை மாசற்றத்தாக மாற்ற முயற்சி செய்வேன். வீடுகளில் மரம் வளர்ப்பவர்களுக்கு வரி தள்ளுபடியும் வழங்கப்படும். கொல்கத்தாவை தூய்மையாக வைப்பதற்கு கழிவு மேலாண்மையும், மறுசுழற்சியும் மிகவும் அவசியம். மாநகராட்சி சேவைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும், பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தினார். கடுமையான மழைக் காலங்களில் நீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

முன்னதாக சி.பி.எம் கவுன்சிலர் பில்குயிஸ் பேகம், ‘கவுன்சிலராக இல்லாத ஒருவர் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிர்ஹந் பதவியேற்புக்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதனையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலில் பிர்ஹத் ஹகிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு கொல்கத்தா மாநகராட்சியின் முதல் இஸ்லாமிய மேயராக பிர்ஹத் ஹகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Also see:


First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்