TMC LEADER SAYS 4 PAKISTAN WILL BE CREATED IF INDIAS 30 PERCENT MUSLIMS UNITE DRAWS FLAK ARU
நாம் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாக்கப்படலாம்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!
ஷேக் ஆலம்
மேற்குவங்க தேர்தல் பரப்புரையில், நாம் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாக்கப்படலாம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்தை முன்வைத்துள்ளார்.
மேற்குவங்க தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் கட்சி பாகுபாடின்றி தலைவர்கள் அதிரடியான, சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் பசா பரா நானூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஆலம், “நாம் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாக்கப்படலாம். மக்கள் தொகையில் நாம் 30%, அவர்கள் 70% உள்ளனர். 70% மக்களின் ஆதரவுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும்.
நம்முடைய முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாக்கப்படலாம். அந்த 70% பேர் எங்கே செல்வார்கள்?” இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஆலம் பேசியுள்ளார். இது மேற்குவங்கத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Y’day, TMC leader Sheikh Alam, giving a speech in Basa para, Nanoor, in Birbhum AC said, if 30% Muslims in India come together, then 4 Pakistan can be formed...
He obviously owes his allegiance to Mamata Banerjee... Does she endorse this position?
இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அமித் மால்வியா, “இவர் வெளிப்படையாக மம்தா பானர்ஜிக்கு விசுவாசமாக இருக்கிறார் ... மம்தா பானர்ஜி இந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொள்கிறாரா? அது போன்ற ஒரு வங்காளம் நமக்கு வேண்டுமா?” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நான் ஒருபோதும் பாகிஸ்தானை கட்டமைக்க வேண்டும் என விரும்பவில்லை. நான் சொன்னது எல்லாம் அவர்கள் எங்களை முஸ்லிம்களை அச்சுறுத்தினால், நாமும் சக்திவாய்ந்தவர்கள் என்பது மட்டுமே. என்னுடைய பேச்சு திரித்துக் கூறப்பட்டுள்ளது என்று ஷேக் ஆலம் விளக்கம் அளித்துள்ளார். மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்க இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தலைவர்களின் சர்ச்சை பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 27% சற்று அதிகமாக உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 14.2% ஆக உள்ளது.