மம்தா பானர்ஜி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறதா மத்திய அரசு? மேற்கு வங்க நிலவரம் என்ன

பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை சட்டவிரோதமாக கலைக்க மத்திய அரசு முயலுகிறது என்பதை நம்புவதற்கான காரணங்கள் உள்ளது

மம்தா பானர்ஜி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறதா மத்திய அரசு? மேற்கு வங்க நிலவரம் என்ன
மம்தா பானர்ஜி
  • News18
  • Last Updated: June 10, 2019, 10:58 PM IST
  • Share this:
மத்திய உள்துறை அறிக்கையைப் பார்க்கும் பா.ஜ.கவுக்கு எதிரானவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தீய வழியில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்வது போல தெரிகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், மூன்று பேர் உயிரிழந்தனர். ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இருவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது. அந்த அறிக்கையில், ‘தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டும்’ என்று வலியுறுத்திருந்தது. அதற்கு உடனடியாக பதிலளித்த மேற்கு வங்க அரசு, ‘சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாராமரிப்பதில் எந்த தவறும் நடைபெறவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தது.


இன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘உள்துறை அமைச்சகம் மேற்கு வங்கத்துக்கு அறிவுரை வழங்கியிருப்பதன் பின்னணியில் ஆழமான சதி உள்ளது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. களநிலவரம் தெரியாமலும், மாநில அரசிடம் அறிக்கை வாங்காமலும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுரையை எழுதியுள்ளது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை சட்டவிரோதமாக கலைக்க மத்திய அரசு முயலுகிறது என்பதை நம்புவதற்கான காரணங்கள் உள்ளது’ என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க ஆளுநரும், அம்மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கின் மீது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘நாங்கள் எப்போதும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகத்தான் உள்ளது. அதற்காக, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:
First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading