அதிருப்தியை வெளிப்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கு துணைத் தலைவர் பதவி அளித்து சரிக்கட்டிய மமதா பானர்ஜி!

மமதாவின் நெருங்கிய உறவினரான அபிஷேக்கை எம்.பி சதாப்தி ராய் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

மமதாவின் நெருங்கிய உறவினரான அபிஷேக்கை எம்.பி சதாப்தி ராய் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தி அதிரவைத்த பெண் எம்.பிக்கு சில தினங்களிலேயே அக்கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு சரிக்கட்டப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்குவங்க மாநிலம்.   ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்கு பின்னர் அக்கட்சிக்குள் பல எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன அதன் வெளிப்பாடாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அக்கட்சியின் முக்கியத் தலைவரான சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். இதன் பின்னர் மேலும் சில தலைவர்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கட்சி மீதான தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி அதிரவைத்தார் அக்கட்சியின் பெண் எம்.பி சதாப்தி ராய். இதனையடுத்து தனது முடிவை நேற்று அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே சஸ்பென்ஸை உடைத்த சதாப்தி ராய், தான் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறப்போவதில்லை என அறிவித்தார். அதற்கு முன்னதாக சக எம்.பியும் மமதாவின் நெருங்கிய உறவினரான அபிஷேக்கை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்தே அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அவரை கட்சியின் துணைத் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவருடன் சேர்த்து Moazzem Hossain மற்றும் Shankar Chakraborty ஆகியோரும் துணைத்தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக பேசிய சதாப்தி ராய், இதனை தான் வரவேற்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் பாஜகவை தோல்வி பெற செய்ய கடினமாக உழைப்பேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் மூத்த தலைவர்களுடனான மனக் கசப்பு குறித்து தெரிவித்த சதாப்தி ராய், அந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தனக்கு துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டிருப்பது இதனை உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: