• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவின் ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ கனவை பூர்த்தி செய்யும் ஆம் ஆத்மி - திரிணாமுல் காங்கிரஸ்!

பாஜகவின் ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ கனவை பூர்த்தி செய்யும் ஆம் ஆத்மி - திரிணாமுல் காங்கிரஸ்!

congress

congress

காங்கிரஸ் கட்சியை ஆளும் பாஜக  மட்டுமே பலவீனப்படுத்தவில்லை, எதிர்கட்சிகள் வரிசையில் உள்ள ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும் கூட பலவீனப்படுத்தி வருகின்றன.

  • Share this:
2019ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதியன்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது, காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என மகாத்மா காந்தி ஆசைப்பட்டார் என தெரிவித்தார்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது எனது கோஷமில்லை, நான் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கி வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்த இந்த கோஷத்தை அப்போது நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக பரவலாக்கியது.

இப்படியே 2021 செப்டம்பருக்கு வருவோம்..

136 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் அமைப்பு இன்று பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக முன்பை விட கடந்த 2 ஆண்டுகளில் அக்கட்சிக்குள் பிரச்னைகள் அதிகரித்து அக்கட்சியை மூழ்கடித்து வருகின்றன. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் கட்சித் தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளன. அதில இந்திய தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லாதது, ராஜஸ்தான் முதல் பஞ்சாப் வரை அக்கட்சியை வளரவிடாமல் தடுத்துள்ளது. இது தவிர காங்கிரஸின் பலம் வாய்ந்த 23 தலைவர்கள் ஒன்றிணைந்து கட்சியினை பலப்படுத்த கோரிக்கை வைத்த நிலையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதும் நடந்திருக்கிறது.

இது போன்ற நிகழ்வுகளால் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற கோஷம் வெகு தூரத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் என 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இது தவிர தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் கூட்டணி அரசில் அங்கம் வகித்து வருகிறது.

Also Read: தாலிபான்கள் செய்த கொடூரச் செயல்: முன்னாள் துணை அதிபரின் சகோதரருக்கு நேர்ந்த அவலம்!

காங்கிரஸ் கட்சியை ஆளும் பாஜக  மட்டுமே பலவீனப்படுத்தவில்லை, எதிர்கட்சிகள் வரிசையில் உள்ள ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும் கூட பலவீனப்படுத்தி வருகின்றன. இவ்விரு கட்சிகளுமே காங்கிரஸ் வாக்குகளை பிரித்து வருவதுடன், காங்கிரஸ் தலைவர்களையும் தங்கள் பக்கமாக சேர்த்து வருகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ்:

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு களத்தில் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குதித்துள்ளது. 2018ம் ஆண்டு பாஜக இடதுசாரிகளை அகற்றிவிட்டு ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது இடதுசாரிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் முயன்று வருகிறது.

mamata banerjee - arvind kejriwal


திரிபுராவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த திரிணாமுல் சமிஞ்ஞைகள் கொடுத்தாகிவிட்டது. ஏற்கனவே அக்கட்சியின் பெரும் தலைவர்கள் திரிபுராவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

Also Read:  சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன பயணிக்கு கத்திக்குத்து: ஊபர் கார் ஓட்டுனர் வெறிச்செயல்!!

ராகுல் காந்தியின் டீமில் இருந்த சுஷ்மிதா தேவ்-ஐ திரிணாமுல் சமீபத்தில் வளைத்துப் போட்டிக்கிறது. இவர் திரிபுராவைச் சேர்ந்தவர். இவர் தவிர முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஷேக் பானர்ஜியையும் திரிணாமுல் வளைத்துப் போட்டிருந்தது.

திரிணாமுல் காங்கிரஸை பொறுத்தவரையில் இரண்டு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று மேற்குவங்கத்தை பலப்படுத்துவது, இதில் அக்கட்சி வெற்றியும் கண்டுள்ளது. தங்களிடம் இருந்து பாஜகவுக்கு தாவிய தலைவர்களை மீண்டும் இழுப்பது தான் முதல் திட்டம். இதில் முகுல் ராய் உள்ளிட்ட 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தற்போது மம்தா முகாமுக்கு திரும்பியுள்ளனர்.

இரண்டாவது திட்டம் மேற்குவங்கத்தை கடந்து பிற மாநிலங்களில் தங்களின் கட்சியை விஸ்தரிப்பது. இதில் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை தங்கள் பக்கமாக இழுக்க திரிணாமுல் காய்நகர்த்தி வருகிறது.

ஆளுங்கட்சி மட்டுமல்லாது எதிர்கட்சியான காங்கிரஸையும் பலவீனப்படுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சி தான் நடத்துகிறோம், என்.ஜி.ஓ எதுவும் நடத்தவில்லை என அவர் காரணம் கூறுகிறார்.

rahul gandhi


ஆம் ஆத்மியின் செயல்பாடு:

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, மம்தா கட்சி போன்றில்லாமல் வேறு விதமான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. அக்கட்சி முதலில் காங்கிரஸில் இருந்து ஈர்த்த ஆல்கா லம்பா, அஜோய் குமார் போன்ற தலைவர்கள் ஆம் ஆத்மியை விட்டு மீண்டும் விலகி காங்கிரஸிலேயே இணைந்தனர். இது போன்ற காரணங்களால் தலைவர்களை தவிர்த்து விட்டு அடிமட்ட அளவில் செயல்படும் காங்கிரஸ் தொண்டர்களை தங்கள் பக்கமாக ஈர்த்து வருகிறது ஆம் ஆத்மி.

Also Read:    இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது – 2021 தான் கடைசி!

2022ம் ஆண்டு டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டை பாஜகவிடம் இருந்து பறிக்கும் வகையில் அடிமட்ட அளவிலான சிறிய தலைவர்களை ஆம் ஆத்மி சேர்த்து வருகிறது.

மேலும் பஞ்சாப், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களிலும் களமிறங்க ஆம் ஆத்மி முனைப்பு காட்டி வருகிறது. மேற்கண்ட மாநிலங்களில் கட்சி சிறப்பாக செயல்பட தலைவர்கள் தேவையில்லை, அடிமட்ட அளவிலான தொண்டர்களே போதும் என கருதும் ஆம் ஆத்மி, சிறிய தலைவர்களை வளைத்துப் போட்டு வருகிறது.

பஞ்சாபை பொறுத்தவரையில் தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு பவரில் உள்ளது. இங்கு அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி நம்பர் 1 கட்சியாக உயரும் என்று சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

கடந்த 7 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து விலகிச் சென்ற எம்.பி. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மட்டும் 177 பேர் என்று ஏடிஆர் அமைப்பு வெளியிட்ட தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

bjp


இது போன்ற சூழலில் பாஜக மட்டுமல்லாது எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸுடன் உள்ள ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அளித்து வரும் நெருக்கடி காங்கிரஸை கதிகலங்கச் செய்துள்ளது. எதிர்வரும் தேர்தல்கள் காங்கிரஸுக்கு நிச்சயம் சவால் மிகுந்ததாக இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: