கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில் ரூ. 25 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஆட்டோ ஓட்டுநர் அனூப். இவர் கேரள அரசு சார்பாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த ஓணம் பம்பர் லாட்டரியை வாங்கியிருந்தார்.
இந்த லாட்டரிக்கான பரிசுத்தொகை ரூ. 25 கோடி என்ற நிலையில் இந்த லாட்டரியின் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் விழா திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்தார்.
அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் அனூப்பின் டிக்கெட் எண்ணான TJ-750605 வெற்றி பெற்ற எண்ணாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற எண் அறிவிக்கப்பட்ட உடன் அந்த டிக்கெட்டிற்கு சொந்தமான ஆள் யார் என அனைவரும் தேட ஆரம்பித்தனர். இறுதியில், அந்த லாட்டரிச்சீட்டு திருவனந்தபுரம் பழவங்காடி என்ற இடத்தில் உள்ள ஒரு ஏஜன்சியில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அனூப் தான் அந்த நபர் என அனைவருக்கும் தெரியவர பத்திரிக்கையாளர்கள் அனூப்பின் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
இதையும் வாசிக்க: மாணவிகள் ஆபாச வீடியோக்கள் ஏதும் வெளியாகவில்லை... சண்டிகர் பல்கலைக்கழகம் மறுப்பு
ரூ. 25 கோடி ஜெயித்தது குறித்து அனூப் கூறுகையில், “இந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறேன் எனத் தெரியவில்லை. இனிமேல்தான் அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால், நான் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளேன்.”, எனத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Lottery, Onam special lottery