அரசு மகப்பேறு மருத்துவமனையில் வினோத பிரச்னை... தாய், மருத்துவர் பரஸ்பர புகார்

நான் பெற்ற குழந்தையை என்னிடம் கொடுக்கவில்லை என்று சசிகலா கூறுகிறார்.

 • Share this:
  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண் சசிகலா. கடந்த ஐந்தாம் தேதி கர்ப்பிணியாக திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த சசிகலாவை பரிசோதித்த டாக்டர்கள், ஜனவரி 16-ம் தேதி மருத்துவமனையில் வந்து பிரசவத்திற்காக சேர வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  சசிகலாவுக்கு பல்வேறு விதமான மருத்துவமனையில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

  இந்தநிலையில் டாக்டர்களின் அறிவுரையின் படி நேற்று மருத்துவமனைக்கு வந்த சசிகலா தன்னை பிரசவத்திற்காக சேர்த்து கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.
  நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் தனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்று கூறும் சசிகலா, அதன்பின் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்கிறார். ஆனால் நான் பெற்ற குழந்தையை என்னிடம் கொடுக்கவில்லை என்று சசிகலா கூறுகிறார்.
  ஆனால் டாக்டர்கள் சசிகலாவுக்கு கர்ப்பமே ஏற்படவில்லை என்று அடித்து கூறுகிறார்.

  இந்த நிலையில் சசிகலா மீது திருப்பதி மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டாக்டர்கள் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சசிகலா மற்றும் அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்துகின்றனர். தனக்கு கர்ப்பம் ஏற்பட்டது உண்மையே என்பதற்கு ஆதாரமாக சசிகலா வளைகாப்பு நடத்தப்பட்டது தொடர்பான போட்டோ மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் அளித்துள்ளார்.

  சசிகலாவுக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா என்பதை வேறு டாக்டர் மூலம் உறுதி செய்து கொள்ளும் ஆலோசனையில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: