ஆந்திர மாநிலம் திருப்பதியில் தூய்மை பணியாளர் ஆன பெண்ணை லாட்ஜுக்கு கூப்பிட்ட சூப்பர்வைசர்க்கு பெண்கள் செருப்படி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அங்கு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு சூப்பர்வைசராக குணசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வேலை வேண்டும் என்றால் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு சுலபமான வேலைகளையும் தனது ஆசைக்கு இணக்காதவர்களுக்கு கடினமாக வேலையும் வழங்கி தொல்லை அளித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் சுசீலா என்பவருக்கு குணசேகர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று குணசேகர் சுசீலாவுக்கு போன் செய்து திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாகவும் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரும் ஒப்புக் கொண்டது போல பேசி திருப்பதியில் உள்ள மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்து அவர்களையும் அழைத்துக்கொண்டு திருச்சானூரில் உள்ள ஓட்டல் அறைக்கு சென்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் மீது காரை மோதிய விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் விசாரனைக்கு ஆஜர்
அப்போது அங்கு காத்திருந்த குணசேகரனை கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று மகளிர் சங்க நிர்வாகிகள் கூறினர்.
மேலும் படிக்க: பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.