முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனா நாடகம்.. காதல் மனைவி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கொரோனா நாடகம்.. காதல் மனைவி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருப்பதி கொலை

திருப்பதி கொலை

மனைவி இறந்தது தொடர்பாக உறவினர்களிடம் கொரோனா நாடகம் நடத்தியது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி மருத்துவமனையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக வழக்கில் 5 நாள்களுக்கு பிறகு மர்மம் விலகியது.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் 5 நாள்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடைத்த தலைமுடியை வைத்து இறந்தது பெண் என போலீஸார் முடிவுக்கு வந்தனர். இறந்தது யார்? இறப்புக்கான காரணம் என எதுவும் தெரியாத நிலையில் போலீஸார் குழப்பத்தில் இருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மர்மமான இந்த வழக்கில் 5 நாட்களுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது.

Also Read:ரூம் விட்டு வெளிய போறியா.. இல்ல கையை அறுத்துக்கவா - டிப்ரஷனில் கல்லூரி பேராசிரியை தற்கொலை

மருத்துவமனை பின்பு எரிந்த நிலையில் சடலமாக கண்டுக்கப்பட்ட பெண் புவனேஷ்வரி என்பதும் அவரது கணவரே அந்தப்பெண்ணை கொலை செய்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி இறந்தது தொடர்பாக உறவினர்களிடம் கொரோனா நாடகம் நடத்தியதும். மருத்துவமனை மார்சுரி வரை உறவினர்களை அழைத்து வந்து அவர்களை நம்பவைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசிய போலீஸார், “ ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் ஸ்ரீகாந்த். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகிறது. ஸ்ரீகாந்த் தனது மனைவியை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். மருத்துவமனை பகுதியில் வைத்து உடலை எரித்துவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் ஸ்ரீகாந்தை எங்களிடம் மாட்டிக்கொண்டார்.

Also Read: அவமானப்பட்ட ஊரில் போலீஸ் அதிகாரியாக வந்திறங்கிய பெண் - கேரளா ஆனி சிவாவின் வெற்றி கதை

மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கொரோனா நாடகம் ஆடியுள்ளார். புவனேஷ்வரிக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிடவே மருத்துவமனை நிர்வாகம் உடலை எரித்துவிட்டதாக கூறி உறவினர்களை நம்ப வைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து பிணவறையில் புவனேஷ்வரியின் சடலத்தை தேடுவதுபோல் நாடகம் ஆடி அவர்களை நம்பவைத்துள்ளார். பிணவறையில் சடலம் இல்லாததால் புவனேஷ்வரியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் எரித்துவிட்டதாக உறவினர்களை நம்பிவைத்துள்ளார்.ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.’எனக் கூறினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Man killed, Murder