• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கணவரின் சடலத்தை பார்த்து சிரித்து போலீசில் சிக்கிய மனைவி!

கணவரின் சடலத்தை பார்த்து சிரித்து போலீசில் சிக்கிய மனைவி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொலை செய்யப்பட்ட தனது கணவரின் சடலத்தை பார்த்து சிரித்த மனைவியால் சந்தேகமடைந்த போலீசார், விசாரணை நடத்தியதில் கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவியை கைது செய்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நாகலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகன்மோகன் ரெட்டி. இவரது மனைவி ரஜினி அப்பகுதியில் மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் வெங்கடராமா என்பவருடன் நெருங்கிப்பழகியதாக கூறப்படுகிறது.

    இதனால், தங்களுக்கு இடையூறாக இருந்த கணவர் ஜகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூ.10 லட்சம் செலவில் கூலிப்படையை இருவரும் அமைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜகன்மோகன் ரெட்டியை காரில் ஆத்மகூரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த கூலிப்படையினர் மூலம் டிராக்டர் மற்றும் ஜேசிபி எந்திரத்தை ஏற்றி ஜகன்மோகனை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், எதுவும் தெரியாதது போல தனது கணவரை காணவில்லை என்று ரஜினி போலீசில் புகாரளித்துள்ளார். பின்னர், தேடுதலுக்குப் பிறகு வனப்பகுதியில் ஜகன்மோகனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பின்னர், அடையாளம் காட்டுவதற்காக ரஜினியை போலீசார் வரவழைத்துள்ளனர்.

    தனது கணவரின் சடலத்தை பார்த்து ரஜினி சிரித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

    இதன் மூலம், ரஜினியும், டாக்டர் வெங்கடராமாவும் இணைந்து ஜகன்மோகனை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: