Home /News /national /

திருப்பதி கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

திருப்பதி கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

திருமலைக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை இன்று முதல் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

அதுமட்டுமல்லாமல் திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக காந்தி ஜெயந்தி அன்று திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்று திருப்பதி நகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து, இன்று முதல் கோவிலுக்குள்-ளும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை  என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை இன்று முதல் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் ரூ.5 ,000  முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தேவஸ்தானம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Tirupathi

அடுத்த செய்தி