ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி கல்யாணம் உற்சவம் பாக்க போறீங்களா.. நாளை டிக்கெட் வெளியீடு.. உடனே புக் பண்ணீடுங்க!

திருப்பதி கல்யாணம் உற்சவம் பாக்க போறீங்களா.. நாளை டிக்கெட் வெளியீடு.. உடனே புக் பண்ணீடுங்க!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

நேற்று வெளியிட்ட சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வெறும் 40 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Andhra Pradesh

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திற்கான டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம்,ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாம்.

  இந்த சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

  டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் w.w.w.tirupatibalaji.ap.gov.in  என்ற இணையதளம் மூலம் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  ALSO READ | ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி... சக்கரத்தில் சிக்காமல் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர்

  மேற்குறிப்பிட்ட சேவைகளில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கலந்து கொண்ட பின் பக்தர்கள் வேறொரு நாளில் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை நேரடியாக வழிபட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை அறிந்த பக்தர்கள் தயாராக 10 மணிக்கு காத்திருந்து டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். வெறும் 40 நிமிடங்களிலேயே 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு டிக்கெட்களும் தீர்ந்து போய்விட்டதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupathi