முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி திருமலை கோயில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற ஒரு வாய்ப்பு!

திருப்பதி திருமலை கோயில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற ஒரு வாய்ப்பு!

திருப்பதி திருமலை

திருப்பதி திருமலை

நாளை பகல் 12 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் திருப்பதி திருமலை கோயிலில் ரூ.500 கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் அவர்களுக்கு தலா ரூ. 500 கட்டணத்தில் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

மார்ச் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட், நாளை பகல் 12 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 500 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டிக்கெட் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupathibalaji.ap.gov.in வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Online application, Tirumala Tirupati, VIP Devotees