Home /News /national /

திருப்பதியில் குவியும் பக்தர்கள்... 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைக்கட்டுகிறது

திருப்பதியில் குவியும் பக்தர்கள்... 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைக்கட்டுகிறது

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டது.

    பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்து வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை 67,750 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே நாளில் இந்த அளவிற்கு பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடவில்லை. இந்த நிலையில் இன்று திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளதால் திருமலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போதைய நிலையில் இலவச தரிசனம் மூலம் தினமும் 30 ஆயிரம் பக்தர்களும், 300 ரூபாய் கட்டண தரிசன மூலம் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுகின்றனர்.

    மார்ச் 26-ல் தொடங்கும் ஐ.பி.எல்: சென்னை அணிகள் மோதும் போட்டிகள் எப்போது- முழு விவரம்

    கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரே நாளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் 5.41 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி ,திருமலை ஆகிய ஊர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் களைகட்டத் துவங்கி உள்ளன.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tirupathi

    அடுத்த செய்தி