திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன் - தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்

திருப்பதியில் திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடனை போலீசார் தட்டி எழுப்பி கைது செய்த வினோதச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன் - தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 10:34 PM IST
  • Share this:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் திருடச் சென்ற வீட்டின் கட்டில் அடியில் குறட்டை விட்டு தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கோக்கவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பைனான்சியர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவரின் வீட்டில் சூரிபாபு புகுந்தார். படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்ட சூரிபாபு, பைனான்சியர் தூங்கியதும் திருட திட்டமிட்டிருந்தார்.Also read: தேசிய கொடியை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு


ஆனால் பைனான்சியர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி பணத்தை எண்ணி முடிக்க நள்ளிரவு 1 மணி ஆனது. அதற்குள் திருடன் கட்டிலுக்கு அடியிலேயே குறட்டை விட்டு தூங்கிவிட்டார். குறட்டை சப்தத்தைக் கேட்ட, ஸ்ரீநிவாஸ் ரெட்டி கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார் குறட்டை விட்டு தூங்கிய திருடனை தட்டி எழுப்பி கைது செய்தனர்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading