முகப்பு /செய்தி /இந்தியா / Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத விலை 4 மடங்கு அதிகரிப்பு!

Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத விலை 4 மடங்கு அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபி, முறுக்கு பிரசாதங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று நடத்தப்படும் திருப்பாவாடை சேவையில் ஜிலேபி, முறுக்கு ஆகியவை ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும்.

கட்டண சேவை ஆன திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இதுதவிர முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் பக்தர்களுக்கும் முறுக்கு, ஜிலேபி பிரசாதத்தை தேவஸ்தானம் பணம் பெற்றுக் கொண்டு வழங்கி வந்தது.

இது நாள் வரை 100 ரூபாய்க்கு ஒரு.முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவின் அடிப்படையில் ஒரு முறுக்கு ஒரு ஜிலேபி ஆகியவற்றின் விலை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read:   வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

இதனிடையே திருமலையில் லட்டு பிரசாத மையங்களில் லட்டு விநியோக பணியானது பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லட்டு விநியோகம் தவிர்த்து தரிசன டோக்கன் விநியோக மையங்கள், ஸ்கேன் பகுதி, தங்கும் அறை ஒதுக்கும் மையங்கள் என 164 இடங்களில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 430 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமலையில் பக்தர்களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக சில சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாகியான தர்மா ரெட்டி தெரிவித்தார்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati laddu