திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 4 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.
இதனால் தற்போது வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால்.ஒருவருக்கு 3 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க.. சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ,ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.