Home /News /national /

திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்.. 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..

திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்.. 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..

திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்குவருடப்பிறப்பான உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 விசேஷ நாட்கள் தொடங்குவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை வைகானச ஆகம விதிகளின்படி கோயில் முழுவதையும் கழுவி சுத்தம் செய்து வாசனை திரவியங்களால் தயார் செய்யப்பட்ட கலவையை கோவில் சுவர்களுக்கு பூசுவது வழக்கம். இதனை கோயில் ஆழ்வார்திருமஞ்சனம் என்று அழைக்கின்றனர்.

    தற்போது வரும் ஜூலை 17ஆம் தேதி ஆணிவாரி ஆஸ்தான தினம் ஆகும். எனவே இன்று காலை கோயில் கருவறை, பலிபீடம், தங்க கொடிமரம், துணைக்கோயில்கள், தங்க கோபுரம், முகப்பு கோபுரவாசல் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் கழுவி சுத்தம் செய்த ஊழியர்கள் அவற்றுக்கு பச்சைகற்பூரம், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனைப்பொருட்களால் ஆன கலவையை பூசினர்.

    Also see... Sabarimala | சபரிமலைக்கு செல்ல இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை: தேவஸ்தானம்



    அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபம், வரிசைகள் ஆகியவற்றில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati

    அடுத்த செய்தி