ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடல்... மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடல்... மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த ஒன்றாம் தேதி மதியம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட 9 இடங்களில் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன்மூலம் இம்மாதம் 11-ம் தேதி வரை ஏழுமலையானை வழிபட இயலும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் தற்காலிகமாக பதினோராம் தேதி வரை மூடப்பட்டன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்கள் எண்ணிக்கை திருப்பதியில் குறைக்கப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதற்காக திருப்பதியில் 9 இடங்களில் 90 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மட்டுமே டோக்கன்களை வாங்கி தரிசனத்திற்கு செல்கின்றனர். எனவே கவுண்டர்கள் அமைக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை குறைத்த தேவஸ்தானம் தற்போது நான்கு இடங்களில் உள்ள 40 கவுண்டர்களில் மட்டுமே பக்தர்களுக்கு டோக்கன்களை வழங்கியது.

கடந்த ஒன்றாம் தேதி மதியம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட 9 இடங்களில் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன்மூலம் இம்மாதம் 11-ம் தேதி வரை ஏழுமலையானை வழிபட இயலும். 11 ம் தேதி வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய தேவையான டிக்கெட் வழங்கும் நடைமுறை இன்று மதியம் நிறைவடைந்தது. எனவே திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன கவுண்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள தேவஸ்தான நிர்வாகம் மீண்டும் 12ஆம் தேதி வழக்கம் போல் மூன்று இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் செயல்பட துவங்கும். அப்போது முதல் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று வழக்கத்தில் இருந்த நடைமுறையில் ஏழுமலையானை வழிபடலாம் என்று அறிவித்துள்ளது.

First published:

Tags: Tirupati