Home /News /national /

திருப்பதியில் இலவச டோக்கன் பெறும் இடத்தில் கூட்ட நெரிசல்- காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பதியில் இலவச டோக்கன் பெறும் இடத்தில் கூட்ட நெரிசல்- காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பதி கூட்டநெரிசல்

திருப்பதி கூட்டநெரிசல்

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மூன்று பேர் காயமடைந்தனர்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசரிக்க இலவச தரிசனத்துக்கான டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் கோதண்ட ராமர் கோவில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.

    வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது. கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் கடந்த சனி, ஞாயிறு, இன்று, நாளை ஆகிய 4 நாட்களுக்கான இலவச தரிசனங்கள் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    3 நாட்களுக்கு பிறகு இலவச தரிசன கவுண்டர் இன்று திறக்கப்பட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பக்தர்கள் டிக்கெட் வாங்க குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    வேறு பெண்ணுடன் வாழ்ந்த கணவர்: உறவினர்களுடன் சென்று தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி

    போலீசார் கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி