• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அக்டோபர் மாதம் திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி

அக்டோபர் மாதம் திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி

திருப்பதி

திருப்பதி

23ம் தேதி முதல் சீனிவாசம் கட்டிட வளாகத்தில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தான நிறுத்திவிட முடிவு செய்துள்ளது

  • Share this:
    அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை இம் மாதம் 24 ஆம் தேதி 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    108 வைணவ ஸ்தலங்களின் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் பக்தர்களுக்கான இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.  300 ரூபாய் டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்ததால் மீண்டும் இலவச தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

    அதன்படி, தினமும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான டோக்கன் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.  தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பிற மாவட்ட, மாநில பக்தர்கள் கோரிக்கை  வைத்தனர். இதையடுத்து இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தில் இருந்து எட்டாயிரம் ஆக உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம் அவற்றை திருப்பதி பேருந்து நிலையம் அருகிலுள்ள சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் இருக்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு விநியோகித்து வருகிறது.

    இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி : மத்திய அரசு முடிவு


    புரட்டாசி மாதம் ஆகையால் தினமும் அதிகாலை 4 மணி முதல் வழங்கப்படும் டோக்கன்களை பெறுவதற்காக இரவு முழுவதும் பக்தர்கள் குவிந்து காத்து கிடக்கின்றனர். இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, 23ம் தேதி முதல் சீனிவாசம் கட்டிட வளாகத்தில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தான நிறுத்திவிட முடிவு செய்துள்ளது.



    மேலும் 24ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை இம் மாதம் 24 ஆம் தேதி 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: