ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் 3 மடங்கு அதிகரித்த ரூம் வாடகை.. பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதியில் 3 மடங்கு அதிகரித்த ரூம் வாடகை.. பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி கோயில்

திருப்பதி கோயில்

சிறப்பு வகை தங்கும் விடுதிகளுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2,200 ஆக விலை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகே உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகையில் அறை ஒன்றுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை 1,700 ஆக தேவஸ்தான நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

சிறப்பு வகை தங்கும் விடுதிகளுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2,200 ஆக விலை அதிகரித்துள்ளது. அறைகளின் வாடகையை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati temple