முகப்பு /செய்தி /இந்தியா / 16 ஆயிரம் திருப்பதி லட்டு முறைகேடு செய்த 30 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!

16 ஆயிரம் திருப்பதி லட்டு முறைகேடு செய்த 30 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

லட்டு டோக்கன்களை ஸ்கேனிங் செய்யும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கவுன்டரில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 16,000 லட்டுகளை முறைகேடு செய்தது பின்னர் தெரியவந்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது லட்டு விற்பனையில் முறைகேடு செய்த 30 ஒப்பந்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான 14-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. இதைக் காண 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

அப்போது லட்டு விற்பனைக் கூடத்தில், லட்டு டோக்கன்களை ஸ்கேனிங் செய்யும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கவுன்டரில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 16,000 லட்டுகளை முறைகேடு செய்தது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்டு விற்பனைக் கூட ஊழியர்கள் பலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், லட்டு விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 30 ஒப்பந்த ஊழியர்கள் மீது திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, முறைகேட்டில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also watch

First published:

Tags: Tirupati, Tirupati laddu