ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி: ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி: ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

தேவையான டிக்கெட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வெளியிடப்பட உள்ளன என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

  ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோல் உட்சவம் ஆகிய கட்டண சேவைகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே தரிசிக்க விரும்பும் பக்தர்கள் நாளை 25ஆம் தேதி தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதில்லை. அதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சர்வ தரிசன டோக்கன்கள் தினமும் 25,000 வீதமும் மற்ற வார நாட்களில் தினமும் 15,000 வீதமும் வழங்கப்படுகின்றன.

  Also see... திருப்பதி லட்டின் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு! |

  மேலும் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களும் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தை என தினமும் 60 முதல் 70,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupati