• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மனிதன், வாகனங்கள்

திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மனிதன், வாகனங்கள்

Youtube Video

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் பெய்த கனமழையின் காரணமாக மனிதன், வாகனங்கள், விலங்குகள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

  • Share this:
    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது. அதேபோல, ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நேற்றைக்கு முந்தைய தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இன்று மாலை முதல் அது தொடர் மழையாக மாறி அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள சிவஜோதி நகரில் எருமைகள் அடித்து இழுத்து செல்லப்பட்டன. கடப்பா, திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆள் ஒருவரை மழை, வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் மழை, வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதியை பொருத்தவரை இதுபோன்ற அதிகன மழை இதற்கு முன்னர் எப்போதும் பெய்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

    திருப்பதி நகரில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்திற்கு காரணம் நகரை சுற்றி இருந்த ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதுதான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: