திருப்பதியில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. தரிசனத்துக்கு ஆன்லைனின் முன்பதிவு செய்தவர்கள் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை வழிபட புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருப்பதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதனால் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தங்களின் டிக்கெட் என்ன ஆகுமோ என கவலைகொண்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளரை சந்தித்த அவர், இம்மாதம் 18ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஏழுமலையானை வழிபடும் வகையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் கனமழை காரணமாக திருப்பதி மலைக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் அதே டிக்கெட்டுகளை பயன்படுத்தி ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஏழுமலையானை வழிபட புதிய சாப்ட்வேர் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மேலும் திருப்பதி மலையில் அனைத்தும் சுமுகமாக உள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்லலாம். திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் 13 இடங்களில் கனமழை காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை போர்க்கால அடிப்படையில் தேவஸ்தானம் சீரமைத்து உள்ளது. திருப்பதி மலையில் இருந்து திருப்பதிக்கு செல்வதற்கான சாலையில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதா... சட்டமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது
கடந்த நான்கு நாட்களாக இரண்டு சாலைகளிலும் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சீராக செல்கின்றன. திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல பயன்படுத்தும் பாதை நன்றாக உள்ளது. எனவே அதனை பக்தர்கள் பயன்படுத்த தடை கிடையாது.
இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து உள்ளது. எனவே தேவை ஏற்பட்டால் விரைந்து செயல்பட தேவஸ்தானத்தின் அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. மேலும் ஜேசிபி இயந்திரங்கள்,ஹிட்டாசி எந்திரங்கள், லாரிகள், டிராக்டர்கள் ஆகியவையும் அவசர காலத்தில் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும் படிங்க: 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் : கெஜ்ரிவால் அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati, Very Heavy rain