Home /News /national /

மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி... வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது நேர்ந்த பரிதாபம்

மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி... வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது நேர்ந்த பரிதாபம்

 இடி

இடி

Tirupati : மரணமடைந்த நான்கு பேர் உடல்களும் ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே மின்னல் தாக்கி நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    லிங்கப்பள்ளம் அருகே உள்ள விளைநிலம் ஒன்றில் விவசாய கூலி தொழிலாளர்கள் 8 பேர் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் மீது மின்னல் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணம் அடைந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ALSO READ | கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறை அனுமதி பெற தேவையில்லை - நீதிமன்றம்

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஏலூரூ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரணமடைந்த 4 பேர் உடல்களும் ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

    செய்தியாளர் : புஷ்பராஜ்- திருப்பதி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி