Home /News /national /

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு 8-ம் தேதி முதல் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு 8-ம் தேதி முதல் அனுமதி

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் வழிபட தேவஸ்தானத்திற்கு ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    ஊரடங்கு நடைமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடைப்பட்ட இரண்டு மாத காலத்தில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க அரசு அனுமதி அளித்தால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏழுமலையானை வழிபடும் வகையில் சாமி தரிசனம் வரிசைகளில் சில மாற்றங்களை செய்த தேவஸ்தான அதிகாரிகள் இரண்டு மீட்டர் தூரத்திற்கு ஒரு பக்தர் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் வகையில் சாமி தரிசனம் வரிசைகளில் ரேடியம் ஸ்டிக்கர்களை பதித்து வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தால் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம் என்று தேவஸ்தான நிர்வாகம் கூறியது.

    இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் அறநிலையத்துறை சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் ஏழு மலையானை தரிசிக்க பரிசோதனை அடிப்படையிலான அனுமதியை வழங்கலாம் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு அனுமதி அளித்துள்ளது.

    மேலும் இதுதொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் அந்த அனுமதியில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவில்களில் எட்டாம் தேதி முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் அனுமதி அளிக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே எட்டாம் தேதி முதல் கட்டமாக ஏழுமலையான் தரிசன வாய்ப்பு தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் ஆகியோருக்கு கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மேலும் படிக்க: ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற தேதி அறிவிப்பு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Tirumala

    அடுத்த செய்தி