Home /News /national /

திருப்பதி ஏழுமலையான் கோவில் வெளிநாட்டு பக்தர்களுக்கு சிக்கல்..

திருப்பதி ஏழுமலையான் கோவில் வெளிநாட்டு பக்தர்களுக்கு சிக்கல்..

Tirupati

Tirupati

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான அனுமதியை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

    வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான அனுமதியை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பித்துக் கொள்ளாததால் வெளிநாட்டு பக்தர்கள் ஏழுமலையானுக்கு நன்கொடை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகள், மதம் சார்ந்த அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

    அத்தகைய சிறப்பு அனுமதியை பெற்றிருந்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாடு வாழ் பக்தர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் இதுபற்றி செய்தியாளர்களுக்கு திருப்பதியில் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி நவீன் குமார் ரெட்டி, தொண்டு நிறுவனங்கள்,மதம் சார்ந்த அறக்கட்டளைகள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை திரட்டுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அந்த அமைப்புகள் அளிக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து அனுமதி அளித்து வருகிறது.

    Also read:  விவாகரத்து கேட்ட மனைவியை பழிவாங்க 7 வயது மகனை கொலை செய்த தந்தை

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளை நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடு வாழ் பக்தர்களிடம் இருந்து நன்கொடையை பெற்று வந்தது. அந்த அனுமதி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகிவிட்டது. அதன் பின்னர் அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு அங்கிருந்து நன்கொடை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான அனுமதியை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் மத்திய உள்துறை அதனைக் கண்டு கொள்ள தவறிவிட்டது.

    Also read:  ‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

    திருப்பதி மலைக்கு மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா பிரமுகர்கள் ஆகியோர் தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்கள் மூலம் மத்திய உள்துறைக்கு உரிய அழுத்தம் கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான அனுமதியை புதுப்பித்துக் கொள்ள தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
    Published by:Arun
    First published:

    Tags: Tirupathi

    அடுத்த செய்தி