ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதிக்கு போறீங்களா..! இனி மொழி பிரச்னையால் திண்டாட வேண்டாம் - புதிய வசதி அறிமுகம்

திருப்பதிக்கு போறீங்களா..! இனி மொழி பிரச்னையால் திண்டாட வேண்டாம் - புதிய வசதி அறிமுகம்

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

Tirupati :திருப்பதியில் மொழி பிரச்னையை போக்குவதற்காக புதிய மொபைல் செயலி ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் தயார் செய்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்து கண்டறிய புதிய வசதி அறிமுகம்.

  திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் திருமலையில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஆன வழியை தங்களுடைய மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்து கண்டறியும் புதிய வசதியை தேவஸ்தான நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.திருப்பதி மலைக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமே அல்லாமல் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

  அவர்களில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தவிர மற்றவர்களுக்கு திருப்பதி மலையில் வழக்கத்தில் இருக்கும் உள்ளூர் மொழி காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கோவிலுக்கு செல்வது, இலவச உணவுக்கு செல்வது,தங்குவதற்காக அறைகள் வாங்க செல்வது, லட்டு பிரசாதம் வாங்க செல்வது,, தங்குவதற்கான அறைகளுக்கு செல்வது ஆகியவற்றின் போது மொழி பிரச்சனை காரணமாக திண்டாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

  இதனை போக்குவதற்காக புதிய மொபைல் செயலி ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள 40 முக்கிய இடங்களை ஸ்கேன் செய்தால் கண்டறியும் வகையிலான க்யூ.ஆர் கோடுகளை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. அவற்றை முக்கிய இடங்களில் பக்தர்கள் பார்வையில் படும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் காட்சிப்படுத்தி உள்ளது.

  Read More: திருப்பதி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் விழா.. சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

  தங்களுடைய மொபைல் போன் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய க்யூ ஆர் கோடினை பக்தர்கள் ஸ்கேன் செய்து தற்போது பயன்படுத்துகின்றனர்.

  செய்தியாளர்: புஷ்பராஜ்- திருப்பதி

  Published by:Srilekha A
  First published:

  Tags: Google map, Smartphone, Tirupati, Tirupati Devotees