முகப்பு /செய்தி /இந்தியா / Tirupati : விடுமுறை முடிந்தும் குறையாத பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருப்பு!

Tirupati : விடுமுறை முடிந்தும் குறையாத பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி

திருப்பதி

அதிக கூட்டம் காரணமாக லட்டு தட்டுப்பாடு இருப்பதால் பக்தர்களுக்கு 2 லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20மணி நேரம் வரை காத்திருந்து பெருமாளை வழிபட்டுவிட்டு செல்கின்றனர்.

கோடை விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் கூட திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்தில்  சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது. மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பெற்றோர்களுடன் வந்திருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பரபரப்பான சூழலில் தொண்டர்களைச் சந்திக்கும் சசிகலா!

இதனால் இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.

தற்போது வரும் பக்தர்களுக்கு 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளநிலையில், . 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் வரை  காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு

அதுமட்டுமில்லை அதிக கூட்டம் காரணமாக லட்டு தட்டுப்பாடு இருப்பதால் பக்தர்களுக்கு 2 லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை நாட்களில் திருப்பதி செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் உங்கள் பயணத்தை தெளிவாக பிளான் செய்து விட்டு கிளம்புங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati laddu