முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை.. ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை.. ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி

tirupati | மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 27-ந் தேதிக்குள் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருமலை திருப்பதி தேவஸ்தான தர்ம பிரச்சார பரிஷத்தில் ஒப்பந்த  அடிப்படையில் நீண்ட காலமாக பணியில் இருக்கும் மூன்று பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்ற ஒரு நபர் பெஞ்சில் முறையீடு செய்திருந்தனர்.

முறையீட்டை ஏற்று விசாரணை நடத்திய சிங்கிள் பெஞ்ச் நீதிபதி மூன்று பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் அந்த உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அமல் செய்யவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அனுமதித்ததாக குற்றம் சாட்டி மூன்று பேரும் உயர்நீதிமன்ற சிங்கிள் பேஞ்சில் முறையீடு செய்தனர்.

அதனை விசாரித்த நீதிமன்றம் தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இம்மாதம் 27 ஆம் தேதிக்குள் தீர்ப்பை அமல் செய்ய தவறினால் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிங்கிள் பெஞ்ச் அளித்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் தேவஸ்தானம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை ஏற்ற டிவிசன் பெஞ்ச், சிங்கிள் பெஞ்ச் அளித்த தீர்ப்பிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also see... திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யமுடியுமா? - தேவஸ்தானம் விளக்கம்!

இந்த நிலையில் இன்று சிங்கிள் பெஞ்ச் நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தேவஸ்தானம் நாளை மேல்முறையீடு செய்ய உள்ளது.

First published:

Tags: Arrested, Tirumala Tirupati, Tirupati