ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை!

திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை!

திருப்பதி

திருப்பதி

Tirupati | சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

தொழிலதிபர் சேகர் ரெட்டி வருங்கால மருமகனுக்கு கடும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

Also see...  கோவையில் நடைபெற்ற அழகி போட்டி.. மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற 21வயது இளம்பெண்!

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் சந்திர மௌலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் உடனடியாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

First published:

Tags: Marriage, Tirumala Tirupati, Tirupati