Home /News /national /

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று, தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூரிய பிரபை வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து சூரிய நாராயணராக அலங்காரம் பூண்ட உற்சவர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

தீப ஆராதனைகளைத் தொடர்ந்து, கோவில் மாடவீதிகளில் சாமி புறப்பாடு நடைபெற்றது. சூரியனின் ஏழு கதிர்களை ஏழு குதிரைகளாக கொண்ட மலையப்ப சுவாமியின் தங்க சூரிய பிரபை வாகன சேவையை, மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.


See Also:
Published by:DS Gopinath
First published:

Tags: Brahmotchavam, Tirupathi

அடுத்த செய்தி