ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் விழா.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் விழா.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சாமி தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

    ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.

    சூரிய பிரபை வாகன சேவையை முன்னிட்டு சூரிய நாராயணர் அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் எழுந்தருள அவருக்கு தூப, தீப,நைவேத்தியம் நடத்தப்பட்டது. அதன் பிறது சூரியனின் ஏழு கதிர்களை குறிப்பிடும் வகையில் ஏழு தங்க குதிரைகள் பொருத்தப்பட்டுள்ள சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டருளினார்.

    Also see... திருப்பதியில் நடைபெற்ற கருட சேவை.. மாட வீதிகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

    பக்தர்களின் பக்தி கோஷம், வேத மந்திர முழக்கம், திவ்ய பிரபந்த கானம் , மங்கள வாத்திய இசை, பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் நடைபெற்ற ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன ஊர்வலத்தை மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati brahmotsavam