திருப்பதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ராயலசெருவு என்ற பெயரிலான பழமையான ஏரி உள்ளது. கிபி 1564 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரி 450 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ராயலசெருவு ஏரியின் மொத்த கொள்ளளவு 1டிஎம்சி ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துவருகிறது. அதிலும், குறிப்பாக திருப்பதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ராயலசெருவு ஏரியில் தற்போது 90 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் ராயலசெருவு ஏரிக்கு 90 சதவிகித இருப்பு இருக்கும் வகையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது கிடையாது. இந்தநிலையில் ஏரியின் வடகரையில் கடந்த சில நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடுவேன் என்று 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அந்த ஏரி மிரட்டி வருகிறது.
ஏரியின் கீழ் பகுதியில் 20 கிராமங்களும் மற்ற பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. எனவே ஏரி உடைந்தால் கீழ்ப்பகுதியில் இருக்கும் 20 கிராமங்களில் தண்ணீர் புகுந்து உடனடியாக பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று முதல் அதிகாரிகள் வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியர், திருப்பதி எஸ்பி, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேற்று மாலை முதல் அங்கேயே முகாமிட்டு ஏரியின் நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அவசரகால தேவைக்காக போலீசார், தீயணைப்பு துறையினர், பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஆகியோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati