திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டு கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதி மலையில் இலவச உணவு பெறும் பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
Also read:
ஜெய்பீம் சர்ச்சை: சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் சரமாரி கேள்வி
இது தவிர ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
Also read:
பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..
சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை திருப்பதி மலையில் அதிகமாக உள்ளது. இதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பிடித்துள்ளதும் அதற்கான சான்றை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக சாதனை புத்தக இந்திய பிரதிநிதி சந்தோஷ் சுக்லா இன்று திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.