ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் நடைபெற்ற கருட சேவை.. மாட வீதிகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..விண்ணை பிளந்த ’கோவிந்தா’ முழக்கம்..!

திருப்பதியில் நடைபெற்ற கருட சேவை.. மாட வீதிகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..விண்ணை பிளந்த ’கோவிந்தா’ முழக்கம்..!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு, குடிநீர்,டீ, காபி போன்ற வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati | Tirupati NMA

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற கருட வாகன சேவையை, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் உலா நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்பர், வாகன மண்டபத்தை அடைந்தார்.

  அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்திற்கு இடையே ஏழுமலையானின் கருட வாகன சேவை, கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது.

  பிரமோற்சவத்தை முன்னிட்டு காலை, இரவு ஆகிய வேலைகளில் உற்சவர் மலையப்பசாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகள் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

  பிரம்மோற்சவத்தின் துவக்க நாள் முதல் நேற்று முன்தினம் வரை திருப்பதி மலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்ற கருட சேவையை கண்டு வழிபட சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர்.

  இதையும் படிங்க | எனது மகனை பழிவாங்க வேண்டாம் - முதல்வர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் கடிதம்

  இரவு 7 மணிக்கு தொடங்கிய கருட வாகன சேவை நள்ளிரவு 12 மணிக்கு மேல் வரை நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கருட வாகன சேவை தரிசிக்க வசதியாக ஒவ்வொரு இடத்திலும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் சுவாமியை நிறுத்தி பக்தர்களுக்கு தரிசன வசதியை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுத்தனர்.

  இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு, குடிநீர்,டீ, காபி போன்ற வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்தது. பக்தர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati brahmotsavam