போதைக்காக சானிடைசரைக் குடித்த 10 பேர் பரிதாப உயிரிழப்பு

சானிடைசர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினியை தனியாகவும், மதுவில் கலந்தும் குடித்த 10 பேர் கடும் வயிற்று வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திராவில் மதுவின் விலையை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டதை அடுத்து மதுகுடிப்போர் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்வது அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் குறிச்சேடு சிறு நகரில் வசிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கள்ளச்சாராயம், ஸ்பிரிட் ஆகியவற்றை குடித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று இரவு மதுவுடன் சானிடைசர் எனும் கிருமிநாசினியை கலந்து குடித்தோர் மற்றும் போதைக்காக கிருமிநாசினியை தனியாக குடித்தோர் என 10 பேருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

  மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Sankar A
  First published: