Home /News /national /

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்

  • News18
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 21-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 18-ம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நவராத்திரி பிரமோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகன சேவை இன்றிரவு கோவில் மாட வீதியில் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடவாகன சேவை வரும் 14-ம் தேதி இரவும், புஷ்பக விமான சேவை 15-ம் தேதி மாலையும் நடைபெறுகின்றன. ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது காலை இரவு என இரு நேரங்களிலும், மாடவீதிகளில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெறும் என்றும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிக அளவில் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Brahmotchavam, Tirupathi

    அடுத்த செய்தி