திருப்பதியில் லட்டு வழங்கும் முறையில் மாற்றம்! இலவச லட்டு அறிமுகம்

திருப்பதியில் லட்டு வழங்கும் முறையில் மாற்றம்! இலவச லட்டு அறிமுகம்
லட்டு
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

உலக அளவில் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு அனைவரது விருப்பப்பட்டியலில் இருக்கும். இந்தநிலையில், திருப்பதி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கும் நடை முறையை தேவஸ்தானம் நாளை முதல் நிறுத்த உள்ளது.

அதற்கு பதிலாக ஒரு இலவச லட்டு வழங்கப்படுகிறது. கூடுதலாக தலா 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.  நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதிகாலை சுப்ரபாத சேவையில் துவங்கி இரவு வரை ஏழுமலையானை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.


Also see:

First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்